நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் சேதமடைந்த கார். 
தமிழகம்

கார்-கண்டெய்னர் லாரி மோதல்: நிலக்கோட்டை அருகே 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், காரும் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

கொடைக்கானல் எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்தவர் சவுமிநாரயணன் (44). டி.வி.மெக்கானிக்கான இவர், குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுவிட்டு காரில் நேற்று மாலை கொடைக்கானலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

நிலக்கோட்டை அருகே மணியக்காரன்பட்டி கருப்பண சுவாமி கோயில் வளைவில் கார் சென்றது. அப்போது எதிரே வந்த, வத்தலகுண்டில் இருந்து மதுரை செல்லும் கண்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. இதில் சவுமிநாராயணன்(44), மனைவி திவ்யா(25), இவரது சகோதரி மகன் ஸ்ரீராம்(15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திவ்யாவின் சகோதரி சுபா(47) படுகாயமடைந்தார். நிலக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT