வீட்டுவசதி வாரிய சுயநிதி மற்றும்வைப்பு நிதி திட்டங்கள் உள்ளிட்டதிட்டப் பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு மனைப்பிரிவு, குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதுதவிர, பிரதமரின் வீடு கட்டும்திட்டங்களின் கீழும் அதிகப்படியான அடுக்குமாடி குடியிருப்புகள் வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வீட்டுவசதி வாரிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நந்தனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கூட்ட அரங்கில்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுவசதித் துறை செயலர் ராஜேஷ் லக்கானி, வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் பா.முருகேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படுத்தப்படும் 26 ஆயிரத்து 903 அலகுகள் கொண்ட40 சுயநிதி திட்டங்கள், 3 வணிகவளாகம் மற்றும் குடியிருப்புகளுக்கான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் ஓபிஎஸ், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும், வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்படும 38 மனைமேம்பாட்டு திட்டங்கள், 22 வணிகவளாகத் திட்டங்கள், தமிழக அரசுஊழியர்கள் வாடகை குடியிருப்புகளுக்கான 10 திட்டங்கள், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கான 2 திட்டங்கள் மற்றும் 5 வைப்புநிதி திட்டங்கள் என அனைத்து திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததோடு, அப் பணிகளை விரைவில் முடிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார்.