எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் ரூ.250 கோடி செலவில் நடந்து வருகின்றன. அருகே உள்ள எழும்பூர் பிரதான ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 220 மீட்டர் தூரத்துக்கு பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கி.மீ. தூரத் துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங் கப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு முதல் எழும்பூர் வரை சுமார் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அந்த வழித்தடத்தில் ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ரூ.250 கோடியில் பல்வேறு வசதிகளுடன் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
கோயம்பேட்டில் இருந்து எழும்பூர் வரை மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்ட்ரல், பரங்கிமலை போல, எழும்பூர் ரயில் நிலையமும் முக்கிய மானதாகும். எனவே, எழும்பூரில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்துசெல்லும் பிரதான ரயில் நிலையத்துக்கும், அருகே உள்ள பேருந்து நிலையத்துக்கும் பயணிகள் செல்லும் வகையில் வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். ரூ.250 கோடி செலவில் பல்வேறு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங் களுடனும் கட்டி வருகிறோம்.
குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ் சாலையில் இருந்து எழும்பூர் மின்சார ரயில் நிலையத்தை அடைய 220 மீட்டர் தூரத்துக்கு நடைமேம்பாலம் அமைக்கப்படும். இது 25 மீட்டர் அகலம் இருக்கும். இதுவரை 75 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பிப்ரவரி அல்லது மார்ச்சில் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.