தமிழகம்

தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர் போராட்டம்

செய்திப்பிரிவு

தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து தங்களது கடல் வளத்தை அழிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இலங்கை வடமாகாண மீனவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே கடந்த மாதம் இந்தியா வந்தார். அப்போது அவரிடம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பிரச்சினை என் பதால் மனிதநேய நோக்கில் அணுக வேண்டும். தமிழக விசைப்படகு மீனவர்களை இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 81 நாள் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இரு நாட்டு மீனவர் சங்கங்களும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

மோடி-ரணில் சந்திப்பைத் தொடர்ந்து இலங்கை வட மாகாணங்களைச் சேர்ந்த மீனவப் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் செப்.17-ம் தேதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அப்போது இக்கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர் கூட்டுறவு சம்மேளனத் தலைவர் அந்தோனி எமிலியாம் பிள்ளை, மன்னார் மாவட்ட மீனவக் கூட்டுறவு சங்க சம்மேளனத் தலைவர் நூர் முகம்மது ஆலம், கிளிநொச்சி மாவட்ட மீனவக் கூட்டுறவு சங்க சம்மேளனத் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்தது:

2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மாற்றுத் தொழில்களைச் செய்வதாக தமிழக விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர். அதை இதுவரை நடைமுறைப்படுத்தாமல் தமிழக விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் நுழைந்து எங்களது கடல் வளத்தை அழித்து வருவதோடு மட்டுமின்றி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள வலைகளை நாசப்படுத்தியுள் ளனர். அதைத் தொடர்ந்து தமிழக விசைப்படகு மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி பருத்தித் துறையில் உள்ள இலங்கை கடற்படை முகாம் முன்பும், யாழ்ப்பாணத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்திய தூதரிடம் மனு அளித்தல் எனப் பல்வேறு போராட்டங்களை கடந்த ஒரு மாதமாக நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக விசைப் படகு மீனவர்களுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை முதல் அஞ்சலட்டை அனுப்பும் போராட் டத்தை யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.

தமிழக விசைப்படகு மீனவர் களுக்கு எதிரான அடுத்தகட்டப் போராட்டம் விரைவில் அறிவிக் கப்படும் என்றனர்.

SCROLL FOR NEXT