தமிழகம்

டிசம்பர் 27-ல் குரூப்- 2ஏ எழுத்துத் தேர்வு

செய்திப்பிரிவு

தமிழக அரசு துறைகளில் உதவியாளர் மற்றும் அதற்கு இணையான பதவிகளை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வினை பட்டதாரிகள் எழுதலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஏதேனும் ஒரு துறையில் அரசு பணி உறுதி. காரணம், நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது.

இந்த நிலையில், வணிகவரித்துறை, போக்குவரத்துத்துறை, பத்திரப் பதிவுத்துறை உள்ளிட்ட துறைகளில் 1,862 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிசம்பர் 27-ம் தேதி குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பு 12-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT