உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நளினி 3 மாதங்கள் விடுப்பு (பரோல்) வழங்கக்கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பியுள்ளார் என அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் அவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நளினி யின் வழக்கறிஞர் புகழேந்தி கூறும்போது, ‘‘நளினிக்கு கண்புரை பாதிப்பால் பார்வை குறைபாடு ஏற்பட் டுள்ளது.
பல் ஈறுகளில் ரத்தக்கசிவு, வயிறு மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகிறார். ரத்தணுக்களின் அளவும் குறைவாக இருப்பதால் பலவீனமாக உள்ளார்.
எனவே, தனது மருத்துவ சிகிச்சைக்காக 3 மாதங்கள் விடுப்பு(பரோல்) வழங்கக்கோரி தமிழக உள்துறை செயலாளருக்கு பெண்கள் சிறை நிர்வா கம் வழியாக மனு அளித்துள்ளதாக நளினி நேற்று என்னிடம் தொலை பேசி வழியாக தெரிவித்தார்’’ என்றார்.