சேத்துப்பட்டு அருகே இரு சக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 762 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆணை மங்கலம் கிராமத்தில், போளூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் நேற்று முன்தினம் தீடீர் சோதனை நடத்தினர். அப் போது, இரு சக்கர வாகனங் களில் அட்டை பெட்டிகளுடன் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், 7 அட்டை பெட்டிகளில் 762 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இரு சக்கர வாகனங்களில் வந்த சேத்துப்பட்டு அடுத்த மங்கலம் கிராமத்தில் வசிக்கும் வேலு(34), ஜெகநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் மகேந் திரன்(39), விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அடுத்த கொடுக்கண்குப்பம் கிராமத்தில் வசிக்கும் குமார்(36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், மதுபாட்டில்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் இவை போலி மதுபாட்டில்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.