கோப்புப்படம் 
தமிழகம்

நெல்லை- 24, தூத்துக்குடி- 60, குமரி- 69, தென்காசி- 8: தென் மாவட்டங்களில் தொடர்ந்து குறையும் கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி உள்பட தென்மாவட்டங் களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

திருநெல்வேலி மாநகராட்சி- 10, மானூர்- 5, பாளையங்கோட்டை- 1, பாப்பாக்குடி- 1, வள்ளியூர்- 5, களக்காடு- 2, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், சேரன்மகாதேவி வட்டாரங்களில் நேற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,491 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று 39 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 13,816 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 549 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 14,293 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 69 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 13,211 பேர் தொற்றில்

இருந்து குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மொத்த கரோனா பாதிப்பு 7,718 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 7,414 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 153 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

SCROLL FOR NEXT