ஓசூர் முத்துலட்சுமி அம்மன் கோயிலில் உள்ள காவல் தெய்வம் கருப்பசாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 14 அடி உயரமுள்ள வீச்சரிவாள். 
தமிழகம்

காவல் தெய்வம் கருப்பசாமிக்கு 14 அடி உயர வீச்சரிவாள் காணிக்கை

செய்திப்பிரிவு

கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் ஓசூரில் இரும்பு பட்டறையில் பத்தலப்பள்ளி முத்துலட்சுமி அம்மன் கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு காணிக்கையாக கொடுக்க வீச்சரிவாள் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து இரும்பு பட்டறையில் 50 கிலோ எடையுள்ள 14 அடி உயரம் கொண்ட ஒரு பெரிய வீச்சரிவாளை வடிவமைத்தனர். இந்த வீச்சரி வாளை பத்தலப்பள்ளி முத்து லட்சுமி அம்மன் கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு காணிக்கையாக ஆனேக்கல் பக்தர் சிவகுமார் வழங்கி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.

SCROLL FOR NEXT