தஞ்சாவூர் குருவாடிப்பட்டியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் ஆய்வு செய்தார்.
அதன் பிறகு அமைச்சர் காமராஜ் கூறியதாவது:
செப்.30ம் தேதியுடன் முடிந்த காரீப் பருவத்தில் 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 12.76 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
தற்போது தமிழகம் முழுதும் 826 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறுவை பருவத்தில் அக்டோபர் 1 முதல் 2.10 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளிடமிருந்து எந்தப் புகாரும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் அரசின் நோக்கம்.
முதல்வர் பழனிசாமி உத்தரவு:
எங்காவது ஒரு இடத்தில் விவசாயிகளிடம் 1 ரூபாய் பெற்றால் கூட அது அவமானம் என்று ஊழியர்களிடம் ஒவ்வொரு கொள்முதல் பருவம் தொடங்கும்போதும் கூறிவிடுவோம்.
இந்த அவமானகரமான செயலை எந்த ஊழியரும் அலுவலரும் செய்யக் கூடாது என்று முதல்வரும் உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்தமாதிரியான புகார் வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது, என்று கூறினார் அமைச்சர் காமராஜ்.