திருக்காலிமேடு பெரியபாளையம் அம்மன் கோயிலில், நவராத்திரி விழாவின் முதல்நாளான நேற்றுமுன்தினம் காமாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் நகரம் திருக்காலிமேடு பகுதியில் அமைந்துள்ள பெரியபாளையம் அம்மன் கோயிலில் சுயம்புவாக அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் நேற்று முன்தினம் தொடங்கிய நவராத்திரி விழா தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழாவின் அனைத்து நாட்களிலும் உற்சவர் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முதல்நாளான நேற்று முன்தினம் உற்சவர் காமாட்சியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.