தமிழகம்

முதுகலை மருத்துவ சிறப்பு படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசு: ஸ்டாலின் கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை மருத்துவ சிறப்பு படிப்புகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்த்தன். அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும் தன்னாட்சியையும் தமிழக முதல்வர் பாதுகாக்க வேண்டும்.’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT