வாணியம்பாடி அருகே நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டதில் விவசாயி படுகாயம் அடைந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். பாக்கெட்டில் செல்போன் இருந்ததால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தது தெரியவந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம் (55). இவர், கடந்த 15-ம் தேதி இரவு வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டுள் ளது. அந்த நேரத்தில் வேலாயுதத் தின் பாக்கெட்டில் இருந்த செல் போன் வெடிக்கும் சத்தமும் கேட் டுள்ளது. எடுத்துப் பார்த்தபோது செல்போன் சேதமடைந்திருந்ததால் பேட்டரி வெடித்திருக்கும் என்று நினைத்து விட்டு உறங்கச்சென்றார்.
மறுநாள் காலை (நேற்று முன் தினம்) அவரது கால் மற்றும் மார்புப் பகுதியில் காயம் காரணமாக வலியால் அவதிப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவர்கள் பரிசோதனையில் வேலாயுதத்தை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதற்கான அடையாளங்கள் இருப்பதும், செல்போனின் பின்பகுதியில் பார்த்தபோது இரண்டு பால்ஸ் உருளைகள் இருந்துள்ளன. இதையடுத்து, அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் நாட்டு துப்பாக்கியால் பாய்ந்த பால்ஸ் உருளைகள் அகற்றப்பட்டன.
இது தொடர்பான புகாரின்பேரில் திம்மாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக அவரை கொலை செய்ய முயற்சி நடந்ததா? அல்லது வனவிலங்கு வேட்டையின் போது மர்ம நபர்கள் குறிதவறி சுட்டார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். பாக்கெட் டில் இருந்த செல்போனால் அதிர்ஷ்டவசமாக வேலாயுதத்தின் இதயப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கியின் பால்ஸ் உருளைகள் பாயவில்லை என்பதால் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.