தங்களிடம் பணியாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை அரசிடம் அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதொழிலாளர் துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து அத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலங்களுக்கு இடையிலானபுலம்பெயர்ந்த தொழிலாளர் சட்டத்தின்படி, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் அனைத்து வேலை அளிப்போரும்பணியமர்த்திய தொழிலாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலர்களிடம் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசால் இதற்கென பிரத்யேகமாக ‘labour.tn.gov.in/ism’ என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில நிறுவனங்கள் மற்றும்தொழிற்சாலைகள் பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது.
எனவே விவரங்களை உடனடியாக பதிவு செய்ய தவறும்பட்சத்தில் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.