தமிழகம்

கஞ்சா விற்பதை தடுக்க வலியுறுத்தி ராஜபாளையத்தில் பெண் சாலை மறியல்: சாலையில் செங்கலை அடுக்கி வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வராணி

செய்திப்பிரிவு

ராஜபாளையம் அய்யனார் கோவில் சாலையில் அம்பேத்கர் நகர் உள்ளது. இப்பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகவும், இதனால் கல்லூரி மாணவர்கள், இப்பகுதி இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மனைவி செல்வராணி(35) சாலையின் குறுக்கே செங்கல்லை வைத்து சாலையில் அமர்ந்து நேற்று மறியல் செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், இப்பகுதியில் கஞ்சா விற்பது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை உட்பட அனைத்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன்.

ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தனி ஒரு பெண்ணாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிப்பேன் என்றார். இவரிடம் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையப் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதி அளித்தனர்.

SCROLL FOR NEXT