ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு அடிப்படையில் எடுக்கப்படும் ‘தலைவி’ (தமிழ்), ‘ஜெயா’(இந்தி) ஆகிய திரைப்படங்கள், ‘குயின்’ வெப் சீரியலுக்காக சட்டப்படியான வாரிசான என்னிடம் அனுமதி பெறாததால் இவற்றுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தேன். ஆனால் வழக்கைதனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். என் குடும்பம் மற்றும்அத்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் காட்சிகள் இருப்பதால், இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இதை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் அமர்வுவிசாரித்து, இறுதி விசாரணைக்காக நவ.10-க்கு தள்ளிவைத்தனர்.