ஜல்லிக்கட்டு தடைக்கு அதிமுக தான் காரணம். வரும் பொங்க லுக்குள் தடையை நீக்கி ஜல்லிக் கட்டு நடத்தாவிட்டால் எனது தலை மையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள் ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் நமக்கு நாமே பிரச்சார பய ணத்தை நேற்று மதுரை மாவட் டத்தில் மேற்கொண்டார். அவனியா புரத்தில் தொடங்கி, மேலூரில் நிறைவு செய்தார். 200 கி.மீ. சுற்றுப்பயணம் செய்த ஸ்டாலின் ஆடு, மாடு மேய்ப்போர், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவி கள், விவசாயிகள், வியாபாரிகள், நூறு நாள் வேலைத்திட்ட தொழி லாளர்கள், பால் உற்பத்தியாளர்கள், வெற்றிலை பயிரிடுவோர், ஜல்லிக் கட்டு வீரர்கள் என பல்வேறு தரப் பினரையும் சந்தித்து குறைகளை கேட்டார்.
உசிலம்பட்டி முத்துராமலிங்கத் தேவர் சிலை, பெருங்காமநல்லூர் நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்தினார். உசிலம்பட்டியில் சைக்கிளில் பயணம் செய்து மக்களை சந்தித்தார். தெருவோர கடைகளில் டீ, வடை, இளநீர் அருந்தினார். பொதுமக்களிடம் ஏராளமான மனுக்களை பெற்றுக் கொண்டு ஸ்டாலின் பேசியது:
1989-ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 4,41,311 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த குழுக்களுக்கு ரூ.6,342 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் வங்கி கடன் வழங்கப்படுவதில்லை. திமுக ஆட்சியில் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய் தோம். அதிமுக ஆட்சியில் மது விலக்கு சாத்தியமில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு அமலாகும் என்றார்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மாடு வீரர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டை முறைப்படுத்தும் சட்டத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தோம். இதை வலுப்படுத்தும் வகையில் அதிமுக செயல்பட்டிருந்தால் ஜல்லிக்கட்டு நீதிமன்றம் தடை விதித்திருக்க முடியாது. பாதுகாப்பற்ற முறையில் ஜல்லிக்கட்டு நடத்தியதாக 2013-ம் ஆண்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்தனர்.
இதற்கும் அதிமுக அரசு தான் காரணம். வரும் பொங்க லுக்குள் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்தாவிட்டால் எனது தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டப்படி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.
ஸ்டாலின் பிரச்சார கூட்டங்கள் நடந்த இடங்களில் எல்லாம் நேற்று முன்தினம் இரவே அதிமுகவினர் ஏராளமான விளம்பர தட்டிகளை வைத்துவிட்டனர். திமுகவினர் தட்டிகள் வைக்க திட்டமிட்டிருந்த இடங்களில் அதிமுகவினர் திட்டமிட்டு ஈடுபட்ட இச் செயலால் திமுகவினர் கடும் அதிருப்தியடைந்தனர்.