தமிழகம்

மாநிலப் பொதுச்செயலாளர் திடீர் விலகல்: மூவர் அணியால் தமாகாவில் கடும் அதிருப்தி

செய்திப்பிரிவு

கோஷ்டி பூசல் காரணமாக தமாகா மாநிலப் பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணன், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

மேலிடத்துடன் ஏற்பட்ட மோத லால் காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச் சர் ஜி.கே.வாசன், கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார். உறுப்பினர் சேர்க்கை முடிந்து கடந்த மே 22-ல் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை வாசன் அறிவித்தார்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மூத்த துணைத் தலைவர்களாக நியமிக்கப் பட்டனர். இது தவிர 9 துணைத் தலைவர்கள், 20 பொதுச் செயலாளர்கள், 32 செயலாளர்கள், 32 இணைச் செயலாளர்கள், 25 கொள்கை பரப்புச் செயலாளர்கள், 70 செயற்குழு உறுப்பினர்கள், 14 அணிகளின் தலைவர்கள், 75 மாவட்டத் தலைவர்கள் என எந்தக் கட்சியிலும் இல்லாத அளவுக்கு 377 பேருக்கு பதவி வழங்கப் பட்டது.

ஆனாலும், தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என வாசனிடம் பலர் புகார் தெரிவித்து வந்தனர். தனது மாவட்டத்தை மூன்றாக பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியன், கடந்த ஜூலை 12-ம் தேதி தமாகா வில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். ‘கட்சி யில் உழைப்பவர்களுக்கு மரி யாதை இல்லை. கட்சி அலுவல கத்துக்கு வருவோர், போவோருக் கெல்லாம் மாநில அளவில் பதவி களை வழங்கி யாருக்கும் மரியாதை இல்லாமல் செய்துவிட்டார்கள்’ என அவர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தமாகா மாநிலப் பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணனும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசனுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.

கட்சியில் இருந்து விலகியது குறித்து ‘தி இந்து’விடம் தாம்பரம் நாராயணன் கூறியதாவது:

கட்சி ஆரம்பித்த 3 மாதங் களிலேயே தமாகாவில் 3 கோஷ்டி கள் உருவாகிவிட்டன. கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர் ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு உழைப்பவர் களை எல்லாம் வெளியேற்றி வரு கின்றனர். தமிழக வரலாற்றிலேயே 500-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் நியமித்த கட்சி தமாகா மட்டுமே. கூட்டணிக்காக மற்ற கட்சிகள் தேடி வரும் நிலையில் விஜயகாந்த் கட்சி நடத்துகிறார். ஆனால், கூட்டணிக்கு ஒரு கட்சியை மட்டுமே வாசன் நம்பியிருக்கிறார். காங்கிரஸைப் போலவே தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக எந்தப் போராட்டத்தையும் நடத்த அவர் ஆர்வம் காட்டவில்லை. எனவே கட்சியிலிருந்து விலக முடிவு செய்து வாசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸைப் போலவே தமாகாவில் கோஷ்டிகள் அதிகரித் துள்ளதாகவும், மாவட்டத்துக்கு 3 கோஷ்டிகள் உருவாகி விட்ட தாகவும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் மாவட்டத் தலைவர், மாநிலப் பொதுச் செய லாளர் போன்ற முக்கிய நிர்வாகி கள் தமாகாவில் இருந்து விலகியி ருப்பது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT