தமிழகம்

மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய போதிய இயந்திரங்கள் இல்லாமல் திணறும் மாநகராட்சி

செய்திப்பிரிவு

மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய சென்னை மாநகராட்சி யிடம் போதிய இயந்திரங்கள் இல்லாததால் கால்வாய்களை சுத்தம் செய்ய முடியாமல் மாநகராட்சிப் பணியாளர்கள் திணறுகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் 1800 கி.மீ. தூரத்துக்கான மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய, 10 சூப்பர் சக்கர் இயந்திரங்களை (கால்வாயின் உள் சென்று கழிவு களை வேகமாக உறிஞ்சும் இயந்திரம்) சொந்தமாக வாங்கு வதற்கு டெண்டர்கள் விடப்பட்டுள் ளன. வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால்வாய்கள் சுத்தம் செய் யப்படும் என்று மேயர் அறிவித் திருந்தார்.

ஆனால், இன்னமும் இயந்திரங் கள் வாங்குவதற்கான டெண்டர் முடிவு செய்யப்படவில்லை. வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரத்தை வைத்துக் கொண்டு சென்னை நகரில் அல்லிக்குளம் சாலை, இளையமுதலி தெரு மற்றும் ஜி.பி.சாலை உள்ளிட்ட சில சாலைகள் மட்டுமே சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய மாநகராட்சியும், பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்ய சென்னை குடிநீர் வாரியமும் மனிதர்களை ஈடுபடுத்தி வந்தன. ஆனால், கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் இயக்குநர் ’பாடம்’ நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கால்வாய்களில் இறங்கி சுத்தம் செய்ததால் உயிரிழந்த 150 பேரின் விவரங் களைக் கொண்டு வழக்கு தொடுத் திருந்தார். அதன் பிறகுதான் மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய இயந்திரங்கள் வாங்கும் பணி மாநகராட்சியில் தீவிரப்படுத்தப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “மனிதர்களை இறக்கி கால்வாய்களை சுத்தம் செய்யாததால் இப்போது சுத்தம் செய்யும் பணிகள் தாமதாக நடை பெற்று வருகின்றன.

சொந்தமாக வாங்கும் 10 இயந்திரங்கள் கூட சென்னையின் மழைநீர் வடிகால்வாய்களை சுத்தம் செய்ய போதாது. எனவே மேலும் சில இயந்திரங்களை வாடகைக்கு எடுக்கவுள்ளோம்” என்றார்.

இந்நிலையில் மழைநீர் வடிகால்வாய்கள் சுத்தமாக இருந்தால் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே ஏற்படாது என்கிறார் பாடம் நாராயணன்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, “சென்னையில் மழைநீர் வடிகால்வாய்களுக்கும் பாதாள சாக்கடைகளுக்கும் வித்தியாசம் இல்லை. சட்டத்துக்கு புறம்பாக திடக்கழிவுகள், இறைச் சிக் கழிவுகளை மழைநீர் வடிகால் வாய்களுக்குள் செலுத்தப்படு வதைத் தடுக்க மாநகராட்சி உறுதி யான நடவடிக்கை எடுக்கவில்லை.

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யவில்லை. கழிவுகளை மழைநீர் வடிகால்வாய்களில் விடுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதில்லை” என்றார்.

SCROLL FOR NEXT