தமிழகம்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: நிதி ஆதாரங்களை இறுதி செய்ய ஜெர்மன் குழு சென்னை வருகிறது

செய்திப்பிரிவு

நெம்மேலியில் கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்துக்கான நிதி ஆதா ரங்களை இறுதி செய்வதற்காக ஜெர்மன் அரசு நிதி நிறுவன ஆய்வுக் குழு அக்டோபர் 5-ம் தேதி சென்னை வருகிறது.

நெம்மேலியில் கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுகிறது. சென்னை யின் முக்கிய நீராதாரங்கள் வறண்டு வரும் நிலையில் மேலும் 150 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறு வதற்கான திட்டத்துக்கு நிதி ஆதா ரங்கள் வழங்குவது தொடர்பாக ஜெர்மன் அரசு நிதி நிறுவனத்துக்கு மத்திய அரசு எழுதியுள்ளது. இதையடுத்து ஜெர்மன் அதிகாரிகள் சென்னை வருகின்றனர்.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

நெம்மேயில் கடல்நீரைக் குடி நீராக்கும் நிலையத்துக்கு தேவை யான நிதி உதவியை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளும்படி மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இத்திட்டத் துக்கான பரிந்துரையை மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஜெர்மன் அரசு நிதி நிறுவனத்துக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ளது.இந்நிலையத்துக்கான விரிவான திட்ட அறிக்கை ரூ.1371.86 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.

நெம்மேலியில் கடல்நீரை உள் வாங்கும் தொட்டியில் நகரும் வடிகட்டிகள், முதல்நிலை சுத்திகரிப் புப் பகுதியில் தட்டடுக்கு வடிகட்டும் தொட்டி உள்ளிட்ட அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன.

இந்த நிலையத்தை பணி ஆணை வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 மாதங்களுக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT