கோப்புப்படம் 
தமிழகம்

சர்வர் பிரச்சினையால் கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றம்

க.ராதாகிருஷ்ணன்

சர்வர் பிரச்சினையால் கரூர் மாவட்டத்தில் ரேஷன் கடை கள் செயல்படும் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பயோமெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு மூலம் பொருட்கள் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரேஷன் கடைகள் வழக்கமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையும் செயல்பட்டு வந்த நிலையில், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.

இதனால், ரேஷன்கார்டு தாரர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்ய காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரையும் ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் அம லுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஜே.ஹஸ்ரத்பேகம் கூறியது:

இந்த நேர மாற்றம் தற்காலிக மானது. சர்வர் பிரச்சினை சரி செய் யப்பட்டதும் மீண்டும் வழக்கமான நேரத்தில் கடைகள் செயல்படும் என்றார்.

SCROLL FOR NEXT