தமிழகம்

கரோனாவால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை

செய்திப்பிரிவு

அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல், கட்சி பணி

களில் ஈடுபட்டு வந்தார். சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், கடந்த 6-ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், கடந்த 9-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியூ) மாற்றப்பட்டார். வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, வெற்றிவேலின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர். ஏற்கெனவே சர்க்கரைநோயாளியான இவர், பைபாஸ் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT