மதுரை அருகே குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன், ஊழியர் முனியசாமி கொலையில் முன்னாள் ஊராட்சி தலைவர், தற்போதைய செயலர் கைது செய்யப்படலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மதுரை வரிச்சியூர் அருகிலுள்ள குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணன் மற்றும் அதே ஊராட்சி ஊழியர் முனியசாமி ஆகியோர் 11--ம் தேதி இரவு குத்திக் கொல்லப்பட்டனர்.
இது தொடர் பாக கருப்பாயூரணி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர். கொலையாளிகளை பிடிக்க, எஸ்பி சுஜித்குமார் உத்தர வின்பேரில் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் எஸ்ஐ, செந்தூர்பாண்டி அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக் கப்பட்டன. குன்னத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் செயலர் நியமனம் உட்பட சில புகார் தொடர்பாக கிருஷ்ணனுக்கும், தற்போதைய ஊராட்சி செயலர் (பொறுப்பு) பால்பாண்டி அவரது தரப்பைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் திருப்பதிக்கும் இடையே பிரச்னை இருந்த நிலையிலர் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலையில் திருப்பதி, பால்பாண்டிக்கு தொடர்பு இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும் தனிப்படை போலீஸார் கூறியது:
1988-2000 வரை அதே ஊரைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் குடும்பத்தினர் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளனர். அப்போது, 1997-ல் அதே ஊரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை திருப்பதி தரப்பினர் ஊராட்சி செயலராக நியமித்துள்ளனர்.
2000-ம் ஆண்டுக்கு பிறகு பழனியப் பன் என்பவரின் தம்பி மனைவி தலைவராக இருந்துள்ளார். ஆனாலும், செயலர் பால்பாண்டி திருப்பதிக்கு ஆதரவாகவே செயல்பட்ட நிலையில் அவர், புதுப்பட்டி என்ற ஊராட்சிக்கு மாற்றப்பட்டார்.
2006-ல் பழனியப்பன் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், அடுத்த முறை திருப்பதியை போட்டியின்றி தேர்வு செய்ய விட்டுக்கொடுப்பது என, அவர்களுக்குள் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 2010 அக்., 19-ம் தேதி பழனியப்பனும், அவரது மகன் சக்திவேலுவும் டூவீலரில் திருப்புவனத்துக்கு சென்றபோது, நாட்டார்மங்கலம் அருகே இறந்து கிடந்தனர்.
லாரி மோதி இருவரும் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது. திருப்பதி தரப்பின் மீது பழனியப்பன் குடும்பத்தினர் சந்தேகித்தாலும், மேல் நடவடிக்கையை பழனியப்பன் குடும்பத்தினர் விரும்பவில்லை.
2012-ல் திருப்பதி தலைவராக தேர்வு செய்யப் பட்டார். பால்பாண்டி மீண்டும் குன்னத்தூர் ஊராட்சிக்கு மாற்றப்பட்டார். 2016-க்கு பின் உள்ளாட்சித் தேர்தல் இன்றி 2019 வரை பால்பாண்டி தொடர்ந்து குன்னதூரில் பணிபுரிந்து வந்த நிலையில், 2020ல் கிருஷ்ணன் தலைவராக வந்தபின், அவர் சக்கிமங்கலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது. இதற்கிடையில், குன்னத்தூர் ஊராட்சி செயலர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமிக்க, கிருஷ்ணன் முயற்சித்தார்.
இது பால்பாண்டிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. ஆனாலும், இது இரட்டை கொலை வரை சென்றிருக்குமா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளோம், மேலும், கிருஷ்ணனுக்கு முன்னதாக இருந் தஊராட்சித் தலைவர் மீது கிருஷ்ணன் தரப்பு ஊழல் புகாரை ஒன்றை கிழக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது உண்மையா என, விசாரிக்கிறோம். இருவேறு கோணத்தில் விசாரணை செல்கிறது. துரிதமாக கொலையாளிகள் கைது செய்யப்படுவர், என்றனர்.