அகரம் கிராமத்தில் நடமாடும் நியாயவிலைக் கடையில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம் விற்பனையை தொடங்கிவைத்தார். 
தமிழகம்

திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 3 கிராமங்களில் நடமாடும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை தொடக்கம்

செய்திப்பிரிவு

நெல்லிக்குப்பம் உள்ளிட்ட 3கிராமங்களில், நடமாடும் நியாயவிலைக் கடைகளில் நேற்று விற்பனை தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம், மானாம்பதியில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், நடமாடும் நியாயவிலைக் கடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விற்பனை செய்யும் பணியை, கூட்டுறவு ஒன்றிய தலைவர் ஆறுமுகம் நேற்று தொடங்கிவைத்தார். இதேபோல், அகரம், மேலையூர், ஆமையாம்பட்டு உள்ளிட்ட கிராமங்களிலும் விற்பனை தொடங்கிவைக்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தின் புதிய கிளைக்கான கட்டிடம் அமைக்கப்பட உள்ள நிலத்தை ஆறுமுகம் ஆய்வுசெய்தார். இதில், அதிமுகவின் ஒன்றிய செயலர் குமரவேல், நந்தகுமார், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் ஆனூர் பக்தவச்சலம், கூட்டுறவு கடன் சங்கதலைவர் வெங்கடேசன், செயலர் துரைவேல், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மன், காட்டூர், பனங்காட்டுப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் நடமாடும்நியாயவிலைக் கடைகளில் விற்பனையை தொடங்கிவைத்தார்.

SCROLL FOR NEXT