தமிழகம்

தஞ்சாவூர் அருகே ஜான்பாண்டியன் மீது தாக்குதல் முயற்சி

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை அருகே தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் பெ.ஜான் பாண்டியனைக் குறி வைத்து கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது ஒழிப்பை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜான்பாண்டியன் பிரச்சாரம் செய்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு அய்யம்பேட்டை அருகேயுள்ள அகரமாங்குடி, வடக்குமாங் குடியில் பிரச்சாரத்துக்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் களில் வந்த அவரது கட்சியினருக் கும், வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அகரமாங்குடி எல்லைக்குள் வந்த ஜான்பாண்டி யனை குறிவைத்து ஒரு கும்பல் கற்களை வீசியது. இதில், அவரது கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் காரின் கண்ணாடிகள் உடைந்தன. போலீஸ் வாகனம் மீதும் கற்கள் வீசப்பட்டன. பதிலுக்கு ஜான்பாண்டியன் ஆதரவாளர்களும் கற்களை வீசியுள்ளனர். இதில் 4 பேர் காயமடைந்தனர். மோதல் தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டனர்.

SCROLL FOR NEXT