தமிழகம்

பொட்டு சுரேஷ் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு: நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பரபரப்பு தகவல்- அட்டாக் பாண்டியை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

கே.மகாராஜன்

பொட்டு சுரேஷ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ‘இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பிருக்கலாம்’ என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரி வித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நண்பரும் திமுக நிர்வாகியுமான பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முதல் குற்ற வாளியாக சந்தேகிக்கப்படும் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டார். இவரை 10 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் போலீ ஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று 2-வது நீதித்துறை நடுவர் பால்பாண்டி முன்னிலையில் நடந்தது. இதற்காக அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறை யிலிருந்து அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கின் விசாரணை அதிகாரி யான சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி நீதிபதி யிடம் கூறியதாவது: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ஏற்கெனவே கைதான ஆரோக்கியபிரபு, ஜெய பாண்டி, சந்தானம் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில், அட்டாக் பாண்டியுடன் கூட்டு சதியில் ஈடுபட்டு பொட்டு சுரேஷை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர். அட்டாக் பாண்டிக்கும், பொட்டு சுரேஷுக்கும் அரசியல் முன் விரோதம் இருந்தது.

‘தான் வகித்துவந்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டதிலும், தனது ஜெயம் பைனான்ஸ் நிதி நிறுவ னத்தில் போலீஸார் தலையிட்ட தற்கும் பொட்டு சுரேஷ்தான் காரணம்’ என்றும் அவரை தீர்த்து கட்டினால்தான் அரசியலில் நிரந்தர மாக நீடிக்க முடியும் எனவும் அட்டாக் பாண்டி தங்களிடம் கூறியதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். பொட்டு சுரேஷ் கொலையில் இவர்களைத் தவிர்த்து வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கொலை செய்ய பயன் படுத்திய ஆயுதம் குறித்த விவரங் களை சேகரிக்க வேண்டியுள்ளது.

அட்டாக் பாண்டி தலைமறை வாக இருந்துகொண்டே சதி செய்து, ஆட்களை ஏவி பொட்டு சுரேஷை கொலை செய்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. அவர், 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வட மாநிலங்களில் தங்கி யுள்ளார். மும்பையில் அவரை கைது செய்தபோது 16 செல்போன் கள், 3 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த செல்போன்களை பயன் படுத்தி, யாரிடம் எல்லாம் பேசி யுள்ளார், ஏடிஎம் கார்டு மூலம் எவ்வளவு பணபரிவர்த்தனை நடந் துள்ளது என விசாரிக்க வேண்டி யுள்ளது. எனவே அவரை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கூடுதல் அரசு வழக்கறிஞர் வி.கனிமொழி வாதிடும்போது, ‘பொட்டு சுரேஷ் கொலை நடந்த நாளிலிருந்தே அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வருகிறார். இவ்வழக்கில் ஏற்கெனவே 18 பேர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். அட்டாக் பாண்டி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

இதில் பொறாமையடைந்த பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி வகித்துவந்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியை பறிக்க வும், அவர் நடத்திய நிதி நிறுவனத் தில் போலீஸ் தலையிடவும் செய் துள்ளார். இப்படி தொடர்ந்து இடை யூறு செய்ததால் பொட்டு சுரேஷை கொலை செய்ய 12.1.2013-ல் சென்னை தி.நகரிலுள்ள ஹோட்ட லில் சதி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

பொட்டு சுரேஷ் கொலை சதிக்கு மூல காரணம் அட்டாக் பாண்டி தான். இக்கொலையில் மேலும் பலருக்கு தொடர்பிருக்க வாய்ப் புள்ளது. அட்டாக் பாண்டியிட மிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மூலம் யாரிடம் பேசினார் என்பதை விசாரிக்க, அவரை மற்ற மாநிலங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டிவரும். எனவே, 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

அட்டாக் பாண்டி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜா வாதிட்டது: இந்த வழக்கில் ஆரம்பம் முதலே போலி என்கவுண் டர் மூலம் அட்டாக் பாண்டியை கொலை செய்ய போலீஸார் திட்ட மிட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகி றோம். அட்டாக் பாண்டி கைதான போது அவரிடமிருந்து செல்போன் கள் பறிமுதல் செய்யப் படவில்லை. சிம்கார்டுகள் மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர். இதன்மூலம் யாரிடம் பேசியுள்ளார் என்ற விவரங் களை சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.

இதற்காக வட மாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பிற மாநிலங் களுக்கு அழைத்துச் செல்லும் போது அவர் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்படலாம் என அஞ்சுகிறோம். மும்பை நீதிமன்றம் 4 நாள் அவகாசம் அளித்தும் அப்போது விசாரிக்காமல் உடனே மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு, தற்போது 10 நாள் கேட்பது சரியல்ல. குறுகிய காலத்துக்கு மதுரையில் வைத்து விசாரிக்கலாம்’ என்றார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நாளை முதல் வரும் ஞாயிற்றுக் கிழமைவரை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனு மதிக்கப்படுகிறது. வெளி மாநிலங் களுக்கு அழைத்துச் செல்லக் கூடாது. வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். மதுரையில் இருக்கும் நாளில் தினமும் மாலை 5 மணி முதல் 5.15 வரை வழக்கறிஞர் அட்டாக் பாண்டியை சந்தித்து பேசலாம்’ என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT