தமிழகம்

தமிழகத்தில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் எஸ்பி, டிஜிபி அலுவலக அதிகாரி உள்ளிட்ட இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட உத்தரவு:

''1. சென்னை டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு உதவி ஐஜி (ஏஐஜி) ஓம்பிரகாஷ் மீனா நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் சென்னை டிஜிபி அலுவலக நிர்வாகப் பிரிவு உதவி ஐஜி (ஏஐஜி)-யாக மாற்றப்பட்டுள்ளார்''.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT