உலக பெண் குழந்தைகள் தினத் தையொட்டி கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எழுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மரக்கன்று வழங்கினார்.
உலக பெண் குழந்தைகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திட்டக்குடி வட்டம் எழுத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அருந்தவம் கருப்பையா, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கிராமப் பெண்களை வரவழைத்து, பெண்குழந்தைகள் குறித்த சிறப்பை விளக்கினார். அப்போது அவர் பேசுகையில், "பெண் குழந்தைகளை சிசுவிலேயே அழிக்கும் சம்பவங் கள் ஆங்காங்கே நிகழ்ந்து வரு கிறது. அதை தவிர்க்க அனைவரும் முன்வரவேண்டும். நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் எனது பெற்றோர். பெண்களால் எதையும் சாதிக்கமுடியும். அவர் களும் உழைத்து முன்னேறும் திறன் கொண்டவர்கள்.
தமிழகத்தில் கடலூர் மாவட் டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் சராசரிக்கும் குறைவாக உள்ளது.
இதனை அறிந்த மத்திய அரசு, பெண் குழந்தைகள் பிறப்பை ஊக்குவிக்கும் வகையில், "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.
எனவே பெண் குழந்தைகளை பெற்றெடுக்க தாய்மார்கள் தயங்கக் கூடாது என தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பங் கேற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு நோட்டு மற்றும் பேனாக்களை அவர் வழங்கினார். அனைவருக் கும் மரக்கன்றுகள் வழங்கிய அவர், அவைகளை நட்டு பராமரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருப்பையா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.