சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரகீம் பேசியதாவது:
கடந்த 4 ஆண்டுகளில் பள்ளி மாணவர்களுக்கு 25 லட்சத்து 14 ஆயிரத்து 199 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 4 ஆண்டுகளில் 23 லட்சத்து 75 ஆயிரத்து 116 மாணவ, மாணவி யருக்கு ரூ.602.25 கோடி கல்வி உதவித் தொகை வழங்கப் பட்டுள்ளது.
இந்தாண்டில், 5 பிற்படுத்தப்பட் டோர், 3 மிகவும் பிற்படுத்தப்பட் டோர், சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையினர் பிரிவில் தலா ஒன்று என 1000 கல்லூரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 10 புதிய விடுதிகள் ரூ.2.82 கோடியில் கட்டப்படும்.
சிறந்த தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்க நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆதிதிராவிடர் துறை
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் விவாத முடிவில், துறை அமைச்சர் என்.சுப்ரமணியன் பதிலளித்து பேசியதாவது:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி மொத்த மக்கள் தொகை யான 7.21 கோடியில், ஆதிதிராவிடர் 1.44 கோடியும், பழங்குடியினர் 7.95 லட்சமும் உள்ளனர்.
சென்னையில் 2 விடுதிகள் உட்பட, நெல்லை, நாமக்கல், திரு வண்ணாமலை, திண்டுக்கல், புதுக் கோட்டை, திருவாரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான விடுதி கள் கட்ட ரூ.1.65 கோடி ஒதுக் கப்படும். 1,125 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு முதலுதவிப் பெட்டிகள் வழங்க ரூ.38.25 லட்சம் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.