டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல் ராஜ் கொலை வழக்கு ஆகியவை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் இருந்து நாமக்கல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை சம்பவமும், இந்த வழக்கை விசா ரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த இரு வழக் குகளும் திருச்செங்கோடு குற்ற வியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. தற்போது இரு வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப் பட்டுள்ள நிலையில், இரு வழக்கு களையும் நாமக்கல் நீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி டிஐஜி கணேசமூர்த்தி நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியிடம் மனு அளித் தார். அதன்பேரில் வழக்கு விசாரணை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள் ளது.
இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி ராஜன், ஆய்வாளர்கள் பிருந்தா, பால்ராஜ் உள்ளிட்டோர் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்புடைய ஆவணங்களை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் எஸ்.மலர்மதி முன் னிலையில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸாரிடம் கேட்டபோது, ‘விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கு குறித்த ஆவணங்கள், அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம், இரு மொபைல் போன், கையடக்க கணினி, மடிக்கணினி உள்ளிட்டவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. விஷ்ணுபிரியா தற்கொலை மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்குகளில் முதற்கட்ட விசாரணை முடிவுறும் நிலையில் உள்ளது. விரைவில் இரு வழக்கு களிலும் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அரசால் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் இந்த இரு வழக்குகளிலும் சிபிசிஐடி தரப்பில் ஆஜராவார்’ என்று தெரிவித்தனர்.