தமிழகம்

திமுக வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர்: மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் கருணாநிதிதான் முதல்வர் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள் ளதாவது:

தமிழகத்தில் 2016-ல் நடக்க வுள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சமீபத்தில் வெளி யான கருத்துக்கணிப்பு பற்றி மு.க.அழகிரி போன்றோர் அளித்த பேட்டி தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். திமுக வெற்றி பெற்றால் கருணா நிதி 6-வது முறையாக முதல் வராக பொறுப்பேற்று, மதுவிலக்கு தொடர்பாக முதல் கையெழுத் திடுவார் என்று அண்மையில் நடந்த மகளிரணி மாநாட்டில் திட்ட வட்டமாக கூறியிருந்தேன்.

தமிழகத்தின் அடுத்த முதல் வர் கருணாநிதிதான் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். முதல்வர் வேட்பாளர் என்று என்னை எப்போதுமே சொல்லிக் கொண் டதில்லை. அந்த எண்ண மும் எனக்கு இல்லை. ஆனால், திமுகவில் பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் நடந்து கொள்கின்றனர். திமுகவை வலுப்படுத்துவதற் காக ஆரோக்கியமான அரசியல் பண்பாட்டை கடந்த 40 ஆண்டுகால மாக பின்பற்றி வருகிறேன். கருணாநிதியால் அப்படித்தான் வளர்க்கப்பட்டேன். அதிலிருந்து மாறி நடக்க விரும்பவில்லை. தனி நபர்களின் விரக்தி பேச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் திமுகவுக்கும் எனக்கும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT