தமிழகம்

செப். 27-ல் கருணாநிதி திருவாரூர் பயணம்: 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

செய்திப்பிரிவு

திருவாரூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான கருணாநிதி, தனது தொகுதியில் பள்ளிக் கட்டிடம் திறப்பு, பொதுக்கூட்டம் உள் ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்பதற்காக செப்டம்பர் 20, 21 தேதி களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக ஏற் பட்ட உடல்நலிவின் காரணமாக திருவாரூர் பயணம் ஒத்திவைக்கப் படுவதாக கடந்த 12-ம் தேதி கருணாநிதி அறிவித்தார்.

இந்நிலையில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அவர் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 27-ம் தேதி மாலை 4 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் திமுக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற் கிறார். மறுநாள் 28-ம் தேதி காலை 10 மணிக்கு காட்டூர் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்படவுள்ள கூடுதல் வகுப்பறை, கலையரங்கத்துக்கு கருணாநிதி அடிக்கல் நாட்டு கிறார். கொரடாச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் 10, 12-ம் வகுப்பு களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

காலை 11.30 மணிக்கு திருவாரூர் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட வகுப் பறை கட்டிடத்தையும் மாலை 5 மணிக்கு வக்கிராநல்லூர் ஊராட்சி யில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தையும் கருணாநிதி திறந்து வைக்கிறார். இத்தகவலை திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT