மண் குவளை டீ 
தமிழகம்

மண் மணம் கமழும் ‘மண் குவளை டீ’ - தொழில் முனைவோரான பொறியியல் பட்டதாரி

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் தேநீர் கடை நடத்தும் பி.இ. பட்டதாரி இளைஞர் ஒருவர், புதிய முயற்சியாக ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக் கும் உகந்த மண் குவளை யில் டீ வழங்குவது வாடிக்கை யாளர்களை ஈர்த்துள்ளது.

மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே டீக்கடை நடத்து பவர் பி.இ. பட்டதாரி அ. ஷேக் தாவூத். 2018-ல் பி.இ. முடித்த இவர் கட்டுமான நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். கரோனா பலரது வாழ்வாதாரத்தையே அசைத்து விட்டதால் ஷேக் தாவூத் சுயதொழில் தொடங்க முடி வெடுத்து டீக்கடை வைத்துள்ளார்.

ஆரம்பத்தில் வித்தியாசமான முயற்சியாக மண் குவளையில் டீ தயாரித்து வழங்கினார். பிளாஸ்டிக் கப், கண்ணாடி டம்ளர்களில் மட் டுமே டீ குடித்து பழகிப்போன வாடிக்கையாளர்களுக்கு, மண் குவளையில் டீ குடிப்பது புது அனுபவமாக இருந்தது.

இதுகுறித்து ஷேக் தாவூத் கூறுகையில், ''மண் பானையில் டீ தயாரித்து, ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் மண் குவளையில் டீ வழங்குகிறேன். கரோனா தொற்று பரவும் இக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பட்டை, புதினா போன்ற மருத்துவக் குணமுள்ள பொருட்களையும் டீயில் சேர்க்கிறேன். இதேபோல அனைத்து டீக்கடை உரிமையாளர்களும் மண் குவளை களை பயன்படுத்தத் தொடங்கினால் சுற்றுச்சூழல் பாது காக்கப்படும். வாடிக்கையாளர்களின் ஆரோக்கியமும் மேம்படும்'' என்றார்.

SCROLL FOR NEXT