தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் முருகன், நேற்று காலை மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு, நேற்று தமிழக பாஜக தலைவர் முருகன் வந்தபோது, அவரை ஆதிபராசக்தி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் வரவேற்றனர்.
அப்போது, அனைவரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைபிடித்து, சித்தர் பீடத்தில் உள்ள கருவறைக்குச் சென்றனர். அங்கு ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாராதனை காட்டி முருகன் வழிபட்டார்.
தொடர்ந்து சித்தர் பீடத்தை வலம்வந்த முருகன், பின்னர் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசிபெற்றார். உடன் சென்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளும் பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றனர். அப்போது பங்காரு அடிகளார் முருகனுக்கும், மற்றவர்களுக்கும் பவளவிழா மலரை வழங்கினார்.