தமிழகம்

தொல்லியல் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழ் மொழியும் சேர்ப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் தொல்லியல் கல்வி நிறுவனத்தில் முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்வதற் கான கல்வித் தகுதியில் எம்.ஏ. தமிழ் படிப்பும் சேர்க்கப்பட்டு, புதிய அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் நேரடி கட்டுப் பாட்டில் இயங்கும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல் லியல் கல்வி நிறுவனம், தொல் லியலில் 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பை வழங்கி வருகிறது. 2020-22 கல்வி ஆண்டில் தொல்லியல் முது கலை பட்டயப் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அறி விப்பை அந்நிறுவனம் சமீபத் தில் வெளியிட்டது. அதில், கல்வித் தகுதி பட்டியலில் தமிழ் தவிர மற்ற அனைத்து செம் மொழிகளும் இடம்பெற்றிருந் தன.

அதனால், முதுகலை தமிழ் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் எழுந்தது. இது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. கல்வித் தகுதி பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டா லின் மற்றும் அரசியல் தலை வர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். இதுதொடர் பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை கல்வித் தகுதியில் முதுகலை தமிழ் படிப்பும் சேர்க்கப்படுவதாக தீன்தயாள் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை இணை இயக்குநர் வெளியிட்டுள்ள திருத்தத்தில், ‘தொல்லியல் முதுகலை பட் டயப் படிப்பு தொடர்பான அறி விக்கையில், கல்வித் தகுதி பகுதியின் 1-ம் பத்தி பின்வரு மாறு வாசிக்கப்பட வேண்டும். அதன்படி, மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து செம்மொழிகளும், அதாவது தமிழ், சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பிராக்ருத், அரபி, பெர்சியன் மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது. இதனால், எம்.ஏ. தமிழ் படித்தவர் களும் தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்புக்கு விண் ணப்பிக்க முடியும். தகுதியுள்ள முதுகலை பட்டதாரிகள் ஆன்லைனில் (www.asi.nic.in) நவம்பர் 8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT