தமிழகம்

அதிமுக வழிகாட்டும் குழுவில் வாய்ப்பு கொடுத்து மதுரை ஆதரவாளர்களுக்கு கைகொடுத்த ஓபிஎஸ்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரையில் இதுவரை அதிமுகவில் ஆதிக்கம் செலுத்தி வந்த முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்களுக்கு ‘செக்’ வைக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் மதுரையைச் சேர்ந்த தனது விசுவாசிகள் இருவருக்கு வழிகாட்டுக் குழுவில் வாய்ப்பு வழங்கியுள்ளதாகக் கூறப் படுகிறது.

தமிழக அரசியல் மாற்றங்கள், நகர்வுகள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலம் முதலே மதுரையை மையமாகவும், களமாகவும் கொண்டே இருந்து வருகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்தான் முதன்முதலில் குரல் எழுப்பினர்.

அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் செய்தது, சசிகலா சிறை சென்றது, முதல்வராக கே.பழனிசாமி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அதிமு கவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. முதல்வர் கே.பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் ஆகியோரின் இரட் டை தலைமையில் ஆட்சியும், கட்சியும் செயல்பட்டு வந்தாலும் தென் மாவட்டங்களில் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்களே கட்சியிலும், ஆட்சியிலும் முக்கி யத்துவம் பெற்றனர்.

எடுத்துக்காட்டாக மதுரை அதிமுகவைப் பொருத்தவரை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலர் விவி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் அதிகார மையங்களாக உள்ளனர். இவர்கள் மூவரும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்கள்.

முன்னாள் எம்பி கோபாலகிரு ஷ்ணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் உள்ளிட்ட சில மதுரை நிர்வாகிகள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் ஆத ரவாளர்களாக உள்ளனர். செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதய குமார், ராஜன்செல்லப்பா ஆகிய மூவரையும் மீறி கட்சியில் யாரும் தலையெடுக்க முடியவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவா ளரான முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் சிட்டிங் எம்பியாக இருந்தும், ‘சீட்’ வாங்க முடியவில்லை. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியனுக்கு வழங்கப் பட்டது.

அதுபோலவே இந்த மும் மூர்த்திகள் கை காட்டிய நபர் களுக்கே மதுரையில் கட்சிப் பதவிகள், ஆவின், கூட்டுறவு, உள்ளாட்சிகளில் பதவிகள் வழங் கப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பா ளராகவும், தென்மாவட்டக்காரராக இருந்தும் தேனியை தவிர மற்ற மாவட்டங்களில் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்கள் கையே இதுவரை ஓங்கியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொறுப்புகளைப் பெற்றுக்கொடுக் காததால் அவரது ஆதரவாளர்கள் விரக்தியடைந்தனர்.

இந்நிலையில், அதிமுக வழிகாட்டுக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், நெல்லையைச் சேர்ந்த மனோஜ்பா ண்டியன் ஆகியோரை இடம்பெறச் செய்தார்.

மதுரையைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள் ளதால் இதுவரை ஆதிக்கம் செலுத்திய முதல்வர் கே.பழனி சாமி ஆதரவாளர்கள் கலக்கம்அடைந்துள்ளனர்.

இது குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

முன்னாள் எம்பி கோபால கிருஷ்ணன், மாணிக்கம் எம்எல்ஏ போன்றவர்கள் கட்சியில் மிகச் சாதாரணமாக இருந்தவர்கள். இவர்கள் கட்சியில் முக்கியத்துவம் பெற்றால் மதுரையில் இனி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகள் அதிகரிப்பார்கள்.

ஆனால், இவர்கள் அமைச் சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோரை மீறி மாவட்டத்துக்குள் வளர முடியுமா? என்பது தெரியவில்லை.

ஆர்.பி.உதயகுமார் கட்சியில் மாநில, மாவட்ட பொறுப்பு, அமைச்சர் என கவனம் ஈர்ப்பவர். செல்லூர் ராஜூ மாநகர் பொறுப்பு, அமைச்சராகவும் இருக்கிறார். ராஜன் செல்லப்பா எம்ஜிஆர் காலம் முதலே கட்சியில் செல்வாக்குடன் இருப்பவர்.

இவர்களை மீறி ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் செயல் பட்டால் மட்டுமே மதுரையில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் செல்வாக்குப் பெற முடியும், என்று கூறினர்.

SCROLL FOR NEXT