ராமநாதபுரத்தில் முதல்வர் பழனிசாமியை புகழ்ந்தும், திமுக தலைவரை கிண்டல் செய்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் முதல்வர் கே.பழனிசாமி புகைப்படத்துடன் அவரை புகழ்ந்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் கிண்டல் செய்யும் வாசகமும் இடம் பெற்ற பெரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதைப் பார்த்த நகர் திமுக செயலாளர் கார்மேகம், ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சியினர் அந்த சுவரொட்டிகளை கிழித்தனர்.
இது குறித்து ராமநாபுரம் டிஎஸ்பி வெள்ளைத்துரையிடம் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.மனோகரன் அளித்துள்ள புகாரில், திமுக தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.