சைபர் குற்றப்பிரிவு போலீஸாரின் புலனாய்வை மேம்படுத்த அவர்களுக்கு காவல்ஆணையர் மகேஷ் குமார்அகர்வால் நேற்று மடிக்கணினிகளை வழங்கினார்.
இணையவழி பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகள் மூலமாக குற்றங்கள் பெருகிவருகின்றன. இந்த வகை குற்றங்களை முற்றிலும் தடுக்கவும், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டத்திலும் சிறப்பு சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு போலீஸார், இணையவழி குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இணையவழி பரிவர்த்தனை மற்றும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடி கும்பலை கைது செய்து, பொதுமக்களின்பணத்தை மீட்டு வருகின்றனர். திருடுபோன செல்போன்களையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சைபர் குற்றப்பிரிவு புலனாய்வை மேம்படுத்தும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டசைபர் குற்றப் பிரிவு பொறுப்புஅதிகாரிகளுக்கும் நேற்று தலாஒரு மடிக்கணினி (லேப்டாப்)என 12 மடிக்கணினிகளை வழங்கினார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் காவல் கூடுதல்ஆணையர் ஏ.அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் எஸ்.விமலா கே.தர்பாபு, பெரோஸ்கான் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.