தமிழகம்

கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் அக்.9-ல் (நாளை) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். அது அடுத்த 24 மணி நேரத்தில்அந்தமான், அதை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்’’ என்றார்.

SCROLL FOR NEXT