தமிழகம்

சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களுக்கு மத்திய தொழிலக படை பாதுகாப்பு அளிக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு தலைமை நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு அளிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான முதலாவது நீதிமன்றத்துக்குள் நேற்று காலை சில வழக்கறிஞர்கள் நுழைந்து உள்ளிருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். அவர்கள் அனை வரும் வாயில் கருப்புத் துணி கட்டிய படியும், கையில் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது. இதில் 2 பெண் வழக்கறிஞர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு தாமாக முன்வந்து நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந் தது. அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

இன்று காலை 10.30 மணிக்கு வழக்கம்போல நீதிமன்றம் கூடியதும், கோட் அணிந்த வழக்கறிஞர்களும், மற்றவர்களும் குழந்தைகளுடன் வந்து நீதிமன்றத்தில் தமிழை வழக் காடும் மொழியாக அறிவிக்க உத்தர விட வேண்டும் என்று கோரினர். இது போல நடக்கப் போகிறது என்று தலைமை நீதிபதி அலுவலகத்துக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படை யில், அத்தகைய சூழ்நிலையைத் தடுக்கும்படி காவல்துறை அதிகாரி களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால், நீதிமன்றம் கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே வழக்கறிஞர்களும் மற்றவர்களும் முதலாவது நீதிமன்றத்துக்குள் வந்து அமர்ந்துவிட்டனர். அவர்களை காவல்துறையினர் தடுக்க முடிய வில்லை. அப்போது வழக்கறிஞர் முருகன் என்பவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசும்போது, ‘‘நீதிமன்றத் தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்காவிட்டால் போராட்டத்தை கைவிட மாட்டோம்’’ என்று மிரட்டும் வகையில் குறிப்பிட்டார்.

இந்தக் கோரிக்கையை இங்கு நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று அவரிடம் விளக்கிக் கூறப் பட்டது. அதன்பிறகும் அவர்கள் பதாகைகளை ஏந்தியபடி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. இலங்கை மீனவர் பிரச்சினை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத் துக்கான பரிந்துரை போன்ற பல காரணங்களுக்காக நீதிமன்ற வளா கத்தில் வழக்கறிஞர்கள் ஊர்வல மாக செல்வதும், கோஷம் எழுப்பு தல் போன்ற சம்பவங்களும் நிகழ்ந் துள்ளன. இதுபோல மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் அடிக்கடி போராட்டங்கள் நடந்துள்ளன.

இதுபோன்ற விரும்பத்தகாத சம் பவங்களும், நினைத்த நேரத்தில் நீதி மன்றத்துக்குள் வந்து போவது போன்ற நடைமுறைகள் இப்போதே தடுக்கப்பட்டாக வேண்டும். சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங் களில் வழக்கு விசாரணை செய்யும் போது, தாங்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறோம் என்று நீதிபதிகள் உணரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.

கடந்தகால சம்பவங்களால் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயங்கு கின்றனர். கடந்த காலத்தில் வழக் கறிஞர்கள் - காவல்துறையினர் இடையே நடந்த மோதல் இத்தகைய சூழலை உருவாக்கி இருக்கிறது. அதனால், நீதிமன்றமும் நீதிபதிகளும் பாதுகாப்பில்லாமல் இருக்கட்டும் என்று விட்டுவிட முடியாது.

நாட்டிலுள்ள அனைத்து உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு பாது காப்பு அளிப்பதுடன், உயர் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலை மைச் செயலாளர்கள், டிஜிபி மற்றும் ஐ.ஜி.களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி விதிமுறை கள் கொண்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது. இந்த வழிகாட்டி முறைகளை மாநில அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

உயர் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு மண்டலமாக அறி விக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் படி மாநில அரசுக்கு உத்தரவு பிறப் பிக்க நாங்கள் இனிமேலும் காத் திருக்க முடியாது. பாதுகாப்பு நட வடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதி உருவாக்கிய குழுவில் ஜூலை 7-ம் தேதி விவாதிக்கப்பட்டது. அப் போது உயர் நீதிமன்ற பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்த வேண்டும் என் றும், அதுகுறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு மூலம் கடிதம் எழுத வேண் டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

எனவே, தற்போதைய சூழ்நிலை யில், இவ்வழக்கை தாமாக எடுத்து தமிழக அரசின் தலைமைச் செய லாளர், மத்திய உள்துறை அமைச் சக முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடு கிறோம். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை யின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது அது போன்ற அமைப்பிடம் ஒப்படைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று நடந்தது போன்ற செயல் களை தடுக்கவும், நீதிமன்றம் இடையூறின்றி செயல்படுவதற்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அவசியம்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி கள், விசாரணையை 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆகியோர் நோட்டீஸை பெற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT