புதிய தமிழகம் கட்சியின் சார்பில்,தமிழகம் முழுவதும் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கோவை உப்பிலிபாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளர், குடும்பர், பண்ணாடி, காலாடி, தேவேந்திர குலத்தார், கடையர் உள்ளிட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர்கள் என அறிவிக்க வேண்டும்.
இப்போது இடம் பெற்றிருக்கக்கூடிய பட்டியலின பிரிவில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
எங்களின் போராட்டங்களை ஒடுக்கிவிட முடியாது. மனசாட்சியுடன் முதல்வர் பழனிசாமி நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.