திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார் உயிரிழந்ததையொட்டி அவரது நினைவிடத்தில் கனிமொழி எம்.பி. இன்று அஞ்சலி செலுத்தினார்.
திமுக முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மனைவியும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம்தென்னரசு மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயாருமான ராஜாமணி அம்மாள் (84) கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
மல்லாங்கிணரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்ப்பாண்டியனின் நினைவிடம் அருகே ராஜாமணி அம்மாளின் உடலும் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மல்லாங்கிணர் வந்த கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும், ராஜாமணி அம்மாள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.