உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 2 மாதத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கப் படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.லிங் கமுத்து, “புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 6 மாதங்கள் ஆகியும் கிடைப் பதில்லை. காலதாமதம் ஆகிறது’’ என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், ‘‘கடந்த 4 ஆண்டுகளில் 12 லட்சத்து 92 ஆயிரம் புதிய ரேஷன் அட்டை கள் வழங்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்களுடன் விண்ணப் பித்தால் 2 மாதத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கப்படும். விசாரணை என்ற நிலையில், ஆய்வுக்கு செல்லும்போது வீட்டில் ஆள் இல்லாத காரணம் போன்ற காரணங்களால் தாமதம் ஏற்படலாம். அம்மா முகாம்களிலும், மாதத்தின் 2-வது சனிக்கிழமை நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் ரேஷன் அட்டை கேட்டு பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் அவற்றை பெறும் நோக்கில் தனித்தனி ரேஷன் அட்டை பெற மக்கள் விரும்புகின்றனர்’’ என்றார்.