ஆவடி அருகே கடத்தப்பட்ட ஒன்றரை வயது குழந்தை, ஆந்தி ராவில் மீட்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக குடும்ப நண்பர் உட்பட 2 பொறி யாளர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வர்கள் சங்கர், ஜெயநந்தினி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திரு மணம் நடந்தது. மோகித் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூரூவில் பணிபுரிந்து வரும் சங்கரும், ஜெயநந்தினியும் கருத்து வேறு பாடு காரணமாக கடந்த ஓராண் டாக பிரிந்து வாழ்கின்றனர். அண்ணனூர் - சிவசக்தி நகர், 28-வது தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது பெற்றோருடன் தங்கி குழந்தை மோகித்தை ஜெயநந்தினி கவ னித்து வந்தார்.
அதே குடியிருப்பில் வசிக்கும் ஜெயநந்தினியின் குடும்ப நண் பரும் தனியார் நிறுவனம் ஒன்றின் இன்ஜினியருமான மனோஜ்குமார் (22) அடிக்கடி மோகித்தை தன் மோட்டார் சைக்கிளில் வெளியில் அழைத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று முன் தினம் மதியம் தான் எடுத்து வந்த நண்பரின் காரில், குழந்தையை அழைத்துக்கொண்டு வழக்கம் போல ஒரு ரவுண்டு சென்று வருவதாக கூறிவிட்டு காரில் சென்றார். ஆனால், நீண்ட நேர மாகியும் மனோஜ்குமார் திரும்ப வில்லை.
இந்நிலையில் செல்போன் மூலம் ஜெயநந்தினியையும் தொடர்பு கொண்ட அவர் மர்ம நபர்கள் தன்னை தாக்கிவிட்டு குழந்தையையும் காரையும் கடத்திச் சென்றுவிட்டதாக கூறியுள் ளார். இதே தகவலை திருமுல்லை வாயல் காவல் நிலையத்துக்கும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொள்ளுமேடு பகுதியிலிருந்து மனோஜ்குமாரை திருமுல்லைவாயில் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், முன் னுக்குப்பின் முரணாக பதிலளித் ததால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதில் ‘மனோஜ்குமாரும், அவரது நண்பரான கும்மிடிப் பூண்டி அடுத்த கவரப்பேட்டை யைச் சேர்ந்த இன்ஜினியர் குமாரவேலுவும் சேர்ந்து குழந் தையை கடத்தியது தெரிய வந்தது. மனோஜ்குமார் வெளி நாட்டில் மேற்படிப்பு படிக்க தேவையான 3 லட்சம் ரூபாயில், 1.50 லட்சம் ரூபாய் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பணத் தேவைக்காக குழந்தையை தன் நண்பர் குமாரவேலு உதவியு டன் கடத்திச் சென்று, பெற் றோரை மிரட்டி பணம் பறிக்க திட்ட மிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, மனோஜ் குமாரை செல்போன் மூலம் குமார வேலிடம் பேச வைத்ததில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் குழந்தையுடன் குமாரவேலு தலை மறைவாக இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். அங்கு விரைந்த போலீஸார் நேற்று அதிகாலை 4 மணிக்கு குழந்தையுடன் காரில் இருந்த குமரவேலை சுற்றி வளைத்தனர். பிறகு, குழந்தையை மீட்டு அவர்களை கைது செய்தனர். பின்னர் தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.