கொடிகாத்த குமரனின் 117-வது பிறந்த நாளையொட்டி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
கொடிகாத்த திருப்பூர் குமரனின் 117-வது பிறந்தநாள் நேற்றுகொண்டாடப்பட்டது. இதையொட்டி முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், “தேசத்துக்காக கடைசி நொடி வரை போராடி தன்னுயிர் நீத்த திருப்பூர் கொடி காத்த குமரனை, அவரது பிறந்த நாளில் போற்றி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதில், ‘‘உயிர் பிரியும் நிலையிலும் மூவண்ணக் கொடியை கீழே விடாது கையில் ஏந்தி வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து முழக்கமிட்ட, கொடி காத்தசுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர்குமரன் தியாகத்தை அவரதுபிறந்தநாளில் நெஞ்சில் ஏந்துவோம். எல்லா வகை அடிமைத்தனத்தையும் எதிர்த்து உறுதியுடன் செயல்படுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.