கோப்புப்படம் 
தமிழகம்

கணினியை முடக்கி 980 டாலர் கேட்டு புகைப்பட நிபுணருக்கு ஹேக்கர்கள் மிரட்டல்: தி.மலை மாவட்ட எஸ்பியிடம் புகார்

செய்திப்பிரிவு

கணினியை முடக்கி 980 டாலர் கேட்டு மிரட்டுவதாக தி.மலை மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகைப்பட நிபுணர் ஒருவர் நேற்று புகார் தெரிவித் துள்ளார்.

தி.மலை கிருஷ்ணன் தெருவில் வசிப்பவர் விஜயகுமார். இவர், தி.மலை போளூர் சாலையில் டிஜிட்டல் டிசைனர் கடை வைத்துள்ளார். இவர், தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் அளித்துள்ள புகார் மனுவில், “கரோனா ஊரடங்கு காரணமாக கடையை திறந்து சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், கணினி மூலம் போட்டோ எடிட்டிங் பணிகளை செய்து வருகிறேன். இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி இரவு 7.30 மணிக்கு, எனது கணினிக்கு வந்த ஒரு தகவலை படித்து பார்த்தபோது, கணினியை ‘ஹேக்’ செய்துள்ளது தெரியவந்தது.

இதன்மூலம் எனது கணினியில் சேமித்து வைத்திருந்த அனைத்து புகைப்படம் உள்ளிட்ட பதிவு களும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. என்னை தொடர்பு கொண்ட ஹேக் கர்கள், 72 மணி நேரத்தில் 490 டாலர் கொடுத்தால், ஹேக் செய்யப்பட்டதை திருப்பி கொடுப்பதாகக் கூறி மிரட்டுகின்றனர். பின்னர், 72 மணி நேரத்துக்கு பிறகு 980 டாலர்கள் கொடுக்க நேரிடும் என மிரட்டுகின்றனர். எனது கணினி இயக்கத்தை முடக்கியதால், என்னுடைய பணி பாதிக்கப் பட்டுள்ளது. இணைய வழி திருட்டு கும்பலிடம் இருந்து எனது கணினி யில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களை (டேட்டா) மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT