சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை பாண்டி பஜார் அருகில் உள்ள அவரது சிலைக்கு ம.பொ.சி.யின் உறவினர்கள்,பாஜக சார்பில் இல.கணேசன் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமானால் அதிமுக உட்கட்சி பிரச்சினையை தீர்க்க வேண்டும்: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து

செய்திப்பிரிவு

சுதந்திர போராட்ட வீரர் ம.பொ.சி.யின் 25-வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:

தமிழுக்காக போராடிய ம.பொ.சி.யின் தியாகம் பெரிது. அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கப் பெற வேண்டும். உத்தர பிரதேச முதல்வர் சட்டம், ஒழுங்கை சிறப்பாக கையாண்டு வருகிறார். பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கையை அவர் எடுப்பார்.

ராகுல் காந்தி நாடகம்

மக்களின் ஆதரவை பெற கீழே விழுவதுபோல் ராகுல் காந்தி நாடகமாடி உள்ளார்.

அதிமுக இரண்டாக உடையும் என பலர் கற்பனை செய்து பார்க்கின்றனர். நான் அப்படி நினைக்கவில்லை. அதிமுகவில் நிலவும் பிரச்சினைகளை முதல்வரும், துணை முதல்வரும் சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் அதிமுக ஆட்சியில் அமர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT