தமிழகம்

குவைத் மன்னர் மறைவு: தமிழக அரசு இன்று துக்கம் அனுசரிப்பு

செய்திப்பிரிவு

குவைத் நாட்டின் மன்னர் ஷேக் சாபா அல்-அகமது, கடந்த செப்.29-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையிலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் தமிழக அரசு சார்பில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘குவைத் மன்னர் மறைவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் தமிழகம்முழுவதும் இன்று (அக்.4) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து, தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடக்காது. அனைத்துஅரசு அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். கீழ்நிலை அதிகாரிகளுக்கு இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT