தமிழகம்

தேசிய மருத்துவ ஆணையம் உதயம் ‘நெக்ஸ்ட்’ தேர்வால் தமிழக மாணவர்கள் முதலிடம் பெறுவர்: லிம்ரா நிறுவன தலைவர் நம்பிக்கை

செய்திப்பிரிவு

கடந்த 60 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய மருத்துவ கவுன்சில் கலைக்கப்பட்டு, தேசிய மருத்துவ ஆணையம் கடந்த செப்டம்பர் 25 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது.

இதற்கான மசோதாவில், மருத்துவக் கல்வி முறையில் NEXT (National Exit Test) என்ற தேர்வுமுறை உருவாக்கப்படுவதும் இணைக்கப்பட்டு தற்போது சட்ட அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

‘நெக்ஸ்ட்’ தேர்வு குறித்தும் இந்திய மருத்துவ ஆணையத்தின் தேவை குறித்தும், லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத் தலைவர் முகமது கனி கூறியதாவது:

இந்திய மருத்துவ கவுன்சில் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்ததால், இந்திய மருத்துவ ஆணைய மசோதா 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

‘நெக்ஸ்ட்’ தேர்வை எம்பிபிஎஸ் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஒரே திறனறித் தேர்வாக அறிமுகப்படுத்துவதன் மூலம், நம் மருத்துவக் கல்வியின் தரம் மேலும் உயரும். இதன் மூலம் சிறப்பாகச் செயல்படும் நம் தமிழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பெறுவார்கள்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோருக்கென நடத்தப்பட்டு வரும் எப்.எம்.ஜி. தேர்வுக்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ தேர்வு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவே எம்.எஸ்., எம்.டி. உயர் பட்டப் படிப்புகளுக்கான நீட்-பி.ஜி. தேர்வுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ளப்படுவதால், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் படிக்கும் மாணவர்கள் இதற்கென தனியாக ஒரு தேர்வை எழுதத் தேவையில்லை.

இதுவரை எப்.எம்.ஜி. மற்றும் நீட்-பிஜி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் லிம்ரா இனி ஒரே தேர்வாக நெக்ஸ்ட் தேர்வுக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தும்.

மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து மேலும் தகவல்கள் வேண்டுவோர் லிம்ரா நிறுவனத்தை 9444048111/9952922333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT