அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை::
அண்ணாவின் 107-வது பிறந்த நாள் செப்டம்பர் 15-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாது அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், டெல்லி, அந்தமான் ஆகிய இடங் களில் அதிமுக நிர்வாகிகள், தொண் டர்கள் அண்ணாவின் உருவச் சிலை, உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்க வேண்டும். செப்டம் பர் 18 முதல் 20-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அனைத்து இடங்களிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற் கும் நிர்வாகிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக் குழுக்களின் பெயர்களும் அறிவிக் கப்பட்டுள்ளன.
கரூரில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, பூந்தமல் லியில் அதிமுக அவைத் தலை வர் இ.மதுசூதனன், சென்னை திருவிக நகரில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விருகம்பாக் கத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வ நாதன், தி.நகரில் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், சைதாப்பேட் டையில் அமைச்சர் பி.பழனியப்பன், உளுந்தூர்பேட்டையில் அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கும்மிடிப்பூண்டியில் அதிமுக மக்களவை குழுத் தலைவர் டாக்டர் பி.வேணுகோபால், புதுச்சேரியில் அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அண்ணா பிறந்த நாளான செப் டம்பர் 15-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.